-யாழ் நிருபர்-
யாழ். கோண்டாவில் பகுதியில் அண்மையில், வீடு ஒன்றினுள் அத்துமீறி உள் நுழைந்த குழு, இளைஞன் ஒருவரை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்குதல் நடாத்தியது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கோப்பாய் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை தேடிவந்த நிலையில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஒரு சந்தேகநபரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைது செய்த நிலையில், நேற்று திங்கட்கிழமை அவரை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிடடுள்ளார்.