இலங்கை மூன்றாவது இடத்தில்

அமெரிக்க பொருளாதார வல்லுநரான ஸ்டீவ் ஹான்கே இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், ‘இந்த வார பணவீக்க அட்டவணையில் இலங்கை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதியன்று நான் இலங்கையின் பணவீக்கமான 119 சதவீத்தை வான் அளவு உயர்வாக கூறினேன்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த மற்றும் ரூபாயை சேமிக்க, இலங்கை 1884 முதல் 1950 வரை இருந்ததைப் போன்ற ஒரு நாணய சபையை நிறுவ வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளமை இதுவே முதல் முறையாகும்.

கடந்த 21ஆம் திகதி வெளியான பட்டியலுக்கு அமைய இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 119 சதவீதத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.