இலங்கை மத்திய வங்கியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 50 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, சிலரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் பண வைப்பகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போயுள்ளதாக கொழும்பு – கோட்டை பொலிஸில், மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்தனர்.
அதன்பிரகாரம் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.