பிரித்தானியாவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவும், இலங்கை செல்லும் தமது நாட்டவர்களுக்கு முக்கிய பயண ஆலோசனைகளை விடுத்துள்ளது.
இதன்படி, இலங்கைக்குச் செல்லும் அவுஸ்திரேலியர்கள், அதிக விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான பயண ஆலோசனையை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
அதேநேரம், அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது நாட்டவர்களை வலியுறுத்தியுள்ளது. அதேநேரம், பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்தும் தமது நாட்டவர்களை அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது.