இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்ச மட்டத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 364,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,538 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.