சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்குள் உள்நுழைந்த 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் சிற்ப தொழில் மற்றும் நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி மதப்பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மதப்பிரசாரங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் கடந்த 8 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சிற்ப தொழிலில் ஈடுபட்டிருந்த 8 இந்தியர்களும், விருந்தகத்தில் பணிப்புரிந்த 5 பேரும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் வழியாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது