இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டத்தின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று உலக வங்கியின் மேலாளர் சியோ காண்டா தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சியோ காண்டா இதனைத் தெரிவித்தார்.
மருந்துகள் , சுகாதாரத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிவாயுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.