அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று வியாழக்கிழமை தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், முதலாம் தவணை விடுமுறை இன்று முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தற்போது அறிவித்துள்ளது.