இன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.