இந்தியாவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கையைச் சேர்ந்த விமல்ராஜ் துரைசிங்கம் மற்றும் திலீபன் ஜெயந்திகுமார் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த வீர குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து ரூ.2.12 கோடி மதிப்புள்ள யூரோக்கள், அமெரிக்க டொலர்கள், ரியால் மற்றும் பிற மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.