சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தலிருந்து இன்று அதிகாலை 01.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 50 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான 05 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.