இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இஞ்சி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சி 2000 ரூபாவுக்கும், 01 கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவை விட அதிக விலைக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இஞ்சிக்கு சந்தையில் காணப்படும் கேள்வியை பூர்த்தி செய்ய முடியாததால் இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.