-யாழ் நிருபர்-
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆறு வயது நிரம்பிய சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின்போதே உறவினர் ஒருவரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.