பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, சட்டத்தரணி வேடத்திலேயே வந்த பெண் ஒருவர் ஆயுதத்தை வழங்கியமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ சமரரத்ன இன்று புதன் கிழமை உயிர் இழந்துள்ளார்.
வழக்கு ஒன்று தொடர்பில் முன்னிலைப்படுத்துவதற்காகப் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்துவரப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.