தமிழ் ஒலிபரப்பில் ஒரு முன்னோடியாக விளங்கிய திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் லண்டனில் நேற்று காலமானார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர், 1970, தொடக்கம் 2005, வரை பி பி சி தமிழோசையில் பணி புரிந்த மூத்த தயாரிப்பாளர்.
1970 களில் பகுதி நேர தயாரிப்பாளராக பணி புரியத் தொடங்கிய ஆனந்தி 80 களில் முழு நேரத் தயாரிப்பாளரானர். இவரது பல தொடர்கள், தலைவர் பிரபாகரன் தொடக்கம் பல முக்கிய நபர்களுடனான பேட்டிகள் போன்றவை எடுத்து BBC தமிழோசையில் வெளிக்கொணர்ந்து நேயர்களிடையே பிரபலம் பெற்றவர்.
அத்துடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டிற்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.