-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் குறித்த ஆசிரியர் நேற்று பாடசாலையில் இருந்து வரும்போது மருதனார்மடம் பகுதியில் வைத்து முகத்தை மூடி துணி கட்டியிருந்த நபர் அவரது தங்கச் சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் நேற்றையதினமே 26 வயதுடைய குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் ஹெரோயினுடன் கைதாகி 8 மாதங்கள் சிறையிலிருந்த பின்னர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.