அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையில் புகையிரதப் பாதையை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பிரதான பொறியியலாளர் பி.ஜே.பிரேமதிலக தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த புகையிரத பாதையில் முதலாவது கட்டமாக அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரையும், இரண்டாம் கட்டமாக இரத்தினபுரியிலிருந்து கஹவத்தை வரையும், மூன்றாம் கட்டமாக எம்பிலிபிட்டிய, சூரியவெவ, மத்தளை ஊடாக ஹம்மாந்தோட்டை துறைமுகம் வரையும் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.