-கிளிநொச்சி நிருபர்-
தற்பொழுது சிறுபோக பயிர்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அறுவடை ஆரம்பிக்கப்பட்டு இருந்த போதிலும் அறுவடைக்கான எரிபொருள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பல விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக ஒரு லீற்றர் டீசலினை 1200 ரூபாய்க்கு அதிகமான பணத்தை கொடுத்து கொள்வனவு செய்து அறுவடையினை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
அப்படி அறுவடை செய்து அந்த நெல்லை விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைத்திருந்த போதிலும் வெளிமாவட்ட வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கே நெல்லினை கொள்வனவு செய்ய முயல்கின்றனர்
இதேவேளை நெல்லை கொள்வனவு செய்வதற்கான வாகனத்திற்கான எரிபொருள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்
இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை தொடர்ச்சியாக உலர விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எமக்கான நெல்லினை விற்பனை செய்வதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
அத்துடன் அரசாங்கம் நெல்லுக்கான விலையினை அறுவடை ஆரம்பக்காலப்பகுதியிலே தீர்மானிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.