அரிசிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயம்

இன்று  திங்கட்கிழமை முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலையும் நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள விலை நிலைவரம் இதோ!

  • ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு வேகவைத்த/அவித்த உள்ளூர் அரிசி- 220 ரூபா
  • ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி – 230 ரூபா
  • ஒரு கிலோகிராம் கீரி சம்பா – 260 ரூபா