பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்து .
வைத்தியர்களின் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததுடன், இன்று காலை 8.00 மணிக்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் அது நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்பட்டது.
சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கிடைத்த நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான பதில்களைதொடர்ந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளது .