புத்தளம் – ஆராச்சிகட்டுவ, பட்டுலுஓயா பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பட்டுலுஓயா பகுதியில் வீதியை விட்டு விலகி, மரத்தில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தின் போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையும் காயமடைந்தவர்களில் அடங்குவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தற்போது சிலாபம் மற்றும் முந்தலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.