குருணாகல் – கொழும்பு வீதியில் நால்ல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நால்ல பிரதேசத்தில் இன்று காலை 06.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறினப்படாத நிலையில் முச்சக்கரவண்டி பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.