முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு இவ்வாறு வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த சாரதி, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பயணிகளை இறக்குவதற்காக பேருந்து நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

