-மஸ்கெலியா நிருபர்-
நாளாந்தம் அதிகாலை வேளையில் ஹட்டன் நகரில் இருந்து அஞ்சல் பொதிகள் மற்றும் அரச தனியார் ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டு முதல் சேவையாக டிக்கோயா கிளங்கன் நோர்வூட் மஸ்கெலியா சாமிமலை சென்று மீண்டும் சாமி மலையில் இருந்து தலைநகர் கொழுப்பு நோக்கி செல்லும் பேருந்தும், மஸ்கெலியா மறே பேருந்து சேவை கடந்த பல நாள்களாக சேவையில் இல்லை இந்த சேவை நாளாந்தம் மறே மஸ்கெலியா மறே ஹட்டன் மற்றும் இடம் பெற்று வந்த சேவைகள் தற்போது இடம் பெறுவது இல்லை.
இதன் காரணமாக இப் பகுதிக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.குரிப்பாக முன் கூட்டியே பணம் செலுத்தி பெற்று கொண்ட பருவகால சீட்டினை வைத்து கொண்டு தனியார் பேருந்துகளில் பணம் செலுத்தி பயன்மிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என புகார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நிறுத்த பட்ட சேவைகள் ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பயணிகள்.










