-கிண்ணியா நிருபர்-
சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இயலளவு விருத்தி செயலமர்வானது மூதூர் பிரதேச செயலகத்தில் நேற்று முன் தினம் புதன் கிழமை திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபீள்யூ. ஜி.எம்.ஹேமந்த குமார வழிகாட்டலின் கீழ் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்றது.
இச்செயலமர்வின் வளவாளராக அந் நிறுவனத்தின் பணிப்பாளர் வி. ஜெயரூபன் கலந்து கொண்டார்.
வளவாளரினால் தற்கால சமுக அபிவிருத்தி, தனிநபர் பாதுகாப்பு திட்டம், விடயமாநாடு, விடய முகாமைத்துவம், வாழ்க்கை பட்டியல்(life chart) மற்றும சமுக அங்கவீனம் போன்ற விடயங்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மூதூர், கிண்ணியா, வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வை பிரதேச செயலகத்தின் நிர்வாக கிளை பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் செ.இ. நிபாஸ் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.கே.எம்.நாஜிர் ஆகியோர்கள் நெறிப்படுத்திருந்தனர்.
Beta feature
