அம்மா பற்றிய கட்டுரை
💢“தாயிற் சிறந்த கோயில் இல்லை” என்று ஒளவையார் அப்போதே தாய்மையின் சிறப்பினை போற்றி பாடியவர். தாய் என்பவள் இல்லை என்றால் இந்த உலகத்தில் மனிதன் என்ற பிறப்பே இருந்திருக்காது. அன்பினுடைய முழு வடிவமே தாய்மையை தான் குறிக்கும். சுயநலம் இல்லாத ஒரு உறவு என்றால் இந்த உலகில் தாய் மட்டும்தான். அம்மா என்ற ஒரு வார்த்தையில் முழு உலகமே அடங்கிவிடும்.
💦அம்மாவை விடச் சிறந்த தெய்வம் பூவுலகில் வேறு ஏதும் இல்லை. மனிதர்களுள் மேன்மையானவளாய் தெய்வங்களே வணங்கிடும் நடமாடும் அழகு தேவதையாய் அன்பின் திருவுருவமாக விளங்குபவள் அம்மா.
💦பல காவற் தெய்வங்கள் இருப்பினும் அன்னை போல் நம்மை காக்கும் தெய்வம் பூமியில் ஏதும் இல்லை. தாயே தெய்வமாய் இருப்பதனால் தான் “தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லைˮ எனக் கூறுகின்றனர். உடலுக்கு உயிர் கொடுத்து தன் இரத்தத்தைப் பாலாக்கி உலகை அறிய வைத்த நடமாடும் தெய்வம் அன்னை.
💦தாய் என்ற ஒற்றை சொல்லின் பொருளாக அளவு கடந்த அன்பு மற்றும் எண்ணிலடங்காத தியாகம் என்று சொல்ல முடியும். ஒரு தாயானவள் ஒரு குழந்தையினை பெற்றெடுத்து அதனை பாராட்டி சீராட்டி பாதுகாத்து வளர்ப்பதற்காக தன்னையே அர்ப்பணிக்கின்றார்.
💦தன் உதிரத்தையே பாலாக தந்து குழந்தைகளினை வளர்க்கின்றாள். வாழ்வில் பல வலிகளை தாங்கி கொண்டு தனது குழந்தைகள் நலனுக்காக உழைக்கின்ற உயர்ந்த தியாக செயலாக இதனை கூறமுடியும்.
💦தாய் என்பவள் மனிதருக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தக்கூடியவள். யாராலும் தாய்மையின் பாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஐந்து அறிவு படைத்த விலங்கினம் கூட தன்னுடைய குட்டிகளை பாதுகாத்து அதற்கு உணவளித்து தாய்ப்பாசத்தை வெளிப்படுத்துகிறது. தாய்ப்பாசம் ஒன்று இல்லையென்றால் இந்த உலகமே ஏதோ நிறைவு பெறாதது போன்று இருக்கும்.
💦தாய் என்பவள் மனிதருக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தக்கூடியவள். யாராலும் தாய்மையின் பாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஐந்து அறிவு படைத்த விலங்கினம் கூட தன்னுடைய குட்டிகளை பாதுகாத்து அதற்கு உணவளித்து தாய்ப்பாசத்தை வெளிப்படுத்துகிறது. தாய்ப்பாசம் ஒன்று இல்லையென்றால் இந்த உலகமே ஏதோ நிறைவு பெறாதது போன்று இருக்கும்.
💦எம்மை பெற்ற வளர்த்து ஆளாக்கிய எமது தாயின் பெருமைகள் எண்ணில் அடங்காதவை மற்றும் ஈடு இணையற்றவை.
💦வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரிய உயர்ந்த ஸ்தானத்தை நாம் எமது அன்னையர்களுக்கு வழங்க வேண்டும். இந்த உலகினில் மிக உயரம் தாயின் பாசம் என்றால் அது மிகையல்ல.
💦தாய் இன்றி ஒரு குழந்தை வளர்வது என்பது அத்தனை இலகுவானதல்ல. குழந்தையினை அன்போடு அரவணைத்து அதன் பசியை போக்க உணவழித்து அதன் தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்து அதனை ஒரு சிறந்த மனிதனாக இந்த சமூகத்தில் வளர்த்தெடுப்பது ஒரு தாயின் முக்கிய பணியாக உள்ளது.
💦நாள் முழுவதும் ஒரு பம்பரம் போலவும் ஓய்வே இல்லாமல் மொத்த குடும்பத்துக்காக ஒரு தாய் ஓடி கொண்டிருப்பார். தாயின் அன்பு முழுமையாக கிடைக்க பெற்ற குழந்தைகள் பெரும் வரம் பெற்றவர்கள்.
💦இன்றைய காலத்தில் சிலர் தம் தாயின் பெருமைகளை அறியாது அவர்கள் மனம் நோக நடந்து கொள்வதனை காண முடியும். இவ்வாறு ஒரு பொழுதும் நடந்து விடக்கூடாது.
💦அம்மா பற்றிய வரிகள்இ அம்மா பற்றிய பேச்சுஇ என் அம்மா என் உலகம் கட்டுரைஇளமையில் எங்களை வளர்த்த அன்னைக்கு நன்றி கடனாக அவர்களை இறுதி வரை பாதுகாப்பது ஒவ்வொரு குழந்தைகளின் கடமையாகும்.
அம்மா பற்றிய கட்டுரை
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்