அமைச்சு பதவிகளுக்கு முண்டியடிக்காமல் ஊட்டச்சத்தின்மையிலிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு நிலவுவதாக யுனிசெப் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கும் போதுஇ ​​கட்சி போதங்கள் பாராமல் அமைச்சு பதவிகளுக்கு முண்டியடிக்காமல் குழந்தைகள் மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், இந்நேரத்தில், புதிய தேசிய ஊட்டச்சத்து கொள்கையை அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் எனவும், முன்னெப்போதையும் விட நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைத் துறைக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்நோக்கங்களுக்காக 6 முதல் 59 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகள் கர்ப்பிணித் தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்கள் பாடசாலை குழந்தைகள் போன்ற முக்கியமான பிரிவினரை இலக்காகக் கொண்டு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் இதற்காக எதிர்க்கட்சியாக வழங்கக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாகவும், இன்று இலங்கையின் ஊட்டச்சத்து குறைபாடு நிலைமை தொடர்பிலான விசேட பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் போஷாக்கு மற்றும் ஊட்டச்சத்தின்மை தொடர்பில் இரண்டு நாள் விவாதம் நடத்துமாறு தாம் கோரிய போது, ​​இவ்வாறான விவாதத்தை வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

கொவிட் காரணமாக நாட்டில் பாரதூரமான சூழல் நிலவிய போதிலும் ஆட்சியாளர்களின் தவறுகளால் அது மேலும் மோசமான சூழலுக்கு மாறியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அதன் காரணமாக இந்நாட்டில் கல்வித்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், யுனிசெப் அறிக்கையின் படி நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் துயரமானது எனவும் மனிதாபிமான உதவி வழங்கப்பட வேண்டிய 57 இலட்சம் பேரில் 23 உலட்சம் பேர் குழந்தைகள் எனவும்,  விளைச்சல் 40-50% வரை குறைந்துள்ளதாகவும் ஒரு குடும்ப அலகு பெறும் உணவின் அளவு 70% ஆல் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் உயர் உணவுப் பணவீக்கம் 93.7% ஆக உயர்ந்துள்ளதாகவும் வருமான நிலைமைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உணவில் சரியான ஊட்டச்சத்து இல்லாததால் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவை அனைத்திலிருந்தும் தேசிய உற்பத்தி செயல்முறைக்கு பெரும் பாதிப்பே ஏற்படுத்துகிறது எனவும் இது மனித முன்னேற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், எனவும் தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து சலுகைப் பொதி கைவிடப்பட்டுள்ள போது இதற்கு நிதி ஒதுக்குவது கடினம் என்று கூறும் போது அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவையை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்தது தவறு எனவும்,  தற்போதைய சூழ்நிலையில் இருந்து குழந்தைகளையும் கர்ப்பிணித் தாய்மார்களையும் பாதுகாப்பதில் தான் இந்நேரத்தில் மிகவும் கூடிய கவனம் இருக்க வேண்டும், எனவும் தெரிவித்தார்.