விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர, தாம் பயன்படுத்திய அலுவலகம் மற்றும் அரச வாகனத்தை அந்த அமைச்சின் செயலாளரிடம் கையளித்தார்.
அத்துடன், நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனைத்து வகையிலும் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
அதேநேரம், அமைச்சின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆதரவை வழங்கிய பணியாளர்களுக்கும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நன்றி தெரிவித்துள்ளார்.










