2.5 மில்லியன் ரூபா பெறுமதியான வைரம் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைர மோதிரம் அமைச்சர் ஒருவரின் மகளுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணும் அவரது சகாக்களும் யால தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள விடுதி ஒன்றில் வார இறுதி நாட்களை கழிக்க தங்கியிருந்த போதே மோதிரம் திருடப்பட்டுள்ளது.
சந்தேகநபர், மேற்படி விடுதிக்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் குளித்துக்கொண்டிருக்கும் போது விடுதியில் உள்ள திறந்த குளியலறையின் சுவரில் தனது மோதிரத்தை வைத்துவிட்டு சென்றதாகவும், அதனை எடுக்க மறந்துவிட்டதாகவும், அந் நேரத்தில், அங்கு வந்த குறித்த சந்தேகநபர் மோதிரத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு இருந்த சி.சி.டிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர் குறித்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.