அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.04 ரூபாவிலிருந்து 327.84 ரூபாவாகக் குறைந்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.98 ரூபாவிலிருந்து 336.79 ரூபாவாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில், வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.











