அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337 ரூபாயைத் தாண்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்று 327.99 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், இன்று அது 328.02 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 337.00 ரூபாயாகப் பதிவாகியிருந்த நிலையில், இன்று அது 337.13 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.











