ஊவா மாகாணத்திற்கும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்.
இதற்கமைய, அப்பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடைக்கிடையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.










