அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிசோரியி ஒரு இலட்சம் பேர் மின்சாரமின்றி இருப்பதாகக் கண்காணிப்பு சேவை தெரிவித்துள்ளது. அத்துடன், ஆர்கன்சஸ், இந்தியானா, டெக்சாஸ் மற்றும் மிசிசிப்பி ஆகிய மாநிலங்களில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களும், மிச்சிகனில் 70 ஆயிரம் பேர் மின்சாரத்தை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக ஜோர்ஜியாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த அவதானத்துடனும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் ஜோர்ஜியாவின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.