மெக்சிகோவின் தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்து நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிர் பிழைத்தவர்கள் பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சான் அகஸ்டின் அகாசாகஸ்ட்லான் நகரத்திலிருந்து தலைநகருக்குள் சென்ற பேருந்து, நகரத்திற்குள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, 20 மீற்றர் ஆழமான கழிவுகள் அடங்கிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களில் 36 ஆண்களின் சடலங்களும் 15 பெண்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.