மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
குருக்கள் மடம் கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் அதிபர் , ஆசிரியர்கள் மலர் மாலை அணிவித்து, பாண்டு வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு விழா ஆரம்பமானது.
இதன் போது ஆசிரியர்களும் , மாணவர்களும் ஒன்றிணைந்து பல்வேறு கிராமிய விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
மேலும் ஆசிரியர் தின கீதம் பாடப்பட்டு ஆசிரியர்களின் பல்வேறு கண் கவர் நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன.