-கிரான் நிருபர்-
2023ம் ஆண்டுக்கான அரச பல்கலைக்கழகங்களுக்குயிடையிலான 14வது விளையாட்டு போட்டி தொடர்பாக பொது மக்களுக்கும் மாவட்ட விளையாட்டு நலன் விரும்பிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடக சந்திப்பானது கிழக்கு பல்கலைகழக கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் வி.கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த உபவேந்தர், இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிடையிலான மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் 14வது விளையாட்டு போட்டியினை வடக்கு, கிழக்கு தமிழ் பல்கலைக்கழகங்களில் முதன் முதலில் கிழக்கு பல்கலைக்கழகம் நடத்துவதில் பல்கலைக்கழகமும் கிழக்கு மாகாணமும் பெருமை கொள்கின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும் இப்போட்டியானது எதிர்வரும் 1.9.2023 தொடக்கம் 8.9.2023 வரை 16 அரச பல்கலைக்கழகங்களை ஒன்றிணைத்து நடைபெறும் என்றும் இப் போட்டியில் 40 விளையாட்டுக்களிலும் 24 விளையாட்டு போட்டிகளும் 6000 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றார்கள்.
இப்போட்டியானது பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் கற்றலுடன் இணைந்த செயற்பாடாக விளையாட்டும் அமைந்து இருப்பதனால் விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களை இனம்கண்டு சான்றிதழ் வழங்குவதுடன் மேலதிகமாக, இலங்கை பல்கலைக்கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்புகளை ஈட்டி கொடுப்பதே இவ் விளையாட்டின் நோக்கமாகும் எனவும்
விளையாட்டு போட்டி நிறைவு நாளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமமந்திரி டினேஸ் குனவர்த்தன மற்றும் கல்வியமைச்ர் சுசில்பிரேமஜெயந்த, உயர்ல்வி அமைச்சர் சுரேண் ராகவன், அமைச்சின் செயலாளர்கள், பல்கலைக்கழகங்களில் உபவேந்தர்கள் நிகழ்விழ் கலந்து சிறப்பிக்க உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
