நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தனியார் மருந்தகங்களும் நாளை சனிக்கிழமை மூடப்படும், என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்துகளுக்கான தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் அதேவேளை, தனியார் மருத்துவ சிகிச்சை நிலைய சேவைகளை நாளை தவிர்ப்பதற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.