கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களினால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி 34 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் மாதம் பதிவான 249 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி மே மாதத்தில் 304 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 1 இலட்சத்து 33,242 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.
அதில், முகவர் நிலையங்கள் ஊடாக 47,692 பேரும், சுயமாக 85,550 பேரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.
அதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 1,640 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.