மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, 2022, ஆகஸ்ட் 3, செப்டம்பர் 3, அக்டோபர் 4, 2023 ஜனவரி 3, பெப்ரவரி 17ஆகிய திகதிகளில் இந்த சேவைகள் அத்தியாவசியமானவை என்று அறிவித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையில் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.