அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும், என அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் விடுவிக்கப்படாமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 300 கொள்கலன்கள் இவ்வாறு விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன என்றும், உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும், என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கலன்களை விடுவிக்க அரசாங்கம் இதுவரையில் மாற்று வழியை முன்வைக்கவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் ஜி.இளமைநாதன் தெரிவித்துள்ளார்.