லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை குறைப்பு தொடர்பான அறிவித்தல் வெளியானது.
கொழும்பில் இடம்பெறும் ஊடக சந்திப்பில், அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,186 ரூபாவுக்கும் 5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,281 ரூபாவுக்கும் 2.3 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 83 ரூபாவினால் குறைக்கப்பட்டு 598 ரூபாவுக்கு இன்று ஞாயிற்றுகிழமை நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் அறிவித்துள்ளார்.