நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக டின் மீன்களை விற்பனை செய்த இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு நேற்று வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இரு கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கடைகளின் உரிமையாளர்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இரண்டு கடைகளுக்கும் எதிராக 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.