நாட்டில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் 24 கரட் தங்கம் 339,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று திங்கட்கிழமை24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 342,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், இன்று திங்கட்கிழமை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 314,200 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,750 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,275 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.