
அதிகரிக்கும் டெங்கு நோய் : 5 மாதங்களில் 9 பேர் உயிரிழப்பு
நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரிப்பதனால் அதனை பொதுமக்களின் உதவியுடன் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் என்.ஆரிப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு கட்டுப்பாட்டின் போது வீடுகளில் மாத்திரம் இன்றி அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்கள் ஆகிய அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் என்.ஆரிப் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000ற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு 9 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமையுடன் டெங்கு, தொற்றுநோய் மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என்பதால் நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்