
அக்கா தம்பி கவிதை வரிகள்
💞“அக்கா” பாசத்தின் தாய்
அரவணைப்பின் அன்னை
மகிழ்ச்சியின் அம்மா..
💞தம்பியின் கோபத்திற்கு
அடங்கவும் அதே தம்பியை
தன் அன்பால் அடக்கவும்
தெரிந்த ஒரு பெண் அக்கா
என்றால் அந்த
அக்கா தம்பி பாசம்
ஒரு சொர்க்கம் தான்..
💞நேரம் காலம் பார்த்து
சண்டை போடுவதல்ல
அக்கா தம்பி பாசம்.
நினைத்த நேரம் எல்லாம்
சண்டை போடுவது தான்
அக்கா தம்பி பாசம்..
💞தம்பிகளுக்கு தான் தெரியும்
தன் அக்காவின் அரவணைப்பும்
கண்டிப்பும் இன்னொரு
தாய்க்கு சமம் என்று..
💞தம்பியை குழந்தையாக
பார்ப்பதும் அக்காவை
அம்மாவாக பார்ப்பதும் தான்
வார்த்தையால் விவரிக்க
முடியாத உன்னதமான உறவு
அக்கா தம்பி..
💞பிறப்பு, இறப்பு, காதல், வாழ்க்கை
எல்லாம் ஒரு முறை ஆனால்
உன் மீது கொண்ட பாசம் மட்டும்
உன் தம்பி சாகும் வரை.
அக்கா..
💞அக்கா தம்பியின் பாசத்திற்கு
முன்னால் அம்மா அப்பாவின்
பாசம் கூட தோற்றுப்போகும்..
💞தம்பிகள் இருக்கும்
அக்காக்களுக்கு மட்டுமே
தெரியும்.. அது குழந்தை அல்ல
குட்டி சாத்தான் என்று..
💞தம்பிக்கு அக்காவிடம்
இருந்து வரும் அன்பினை விட
சிறந்தது வேறு எதுவுமில்லை..
அக்காவிற்கு தம்பியிடம்
இருந்து வரும் அன்பினை விட
சிறந்தது வேறு எதுவுமில்லை..
💞அக்காவின் கண்ணீரை
தாங்கிக் கொள்ளும் சக்தி
தம்பிக்கும் இல்லை..
தம்பியின் கண்ணீரை
தாங்கி கொள்ளும் சக்தி
அக்காவிற்கும் இல்லை..
💞எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் கடைசி வரை
பிரியாமல் இருக்கும்
ஒரே உறவு அக்கா தம்பி
உறவு மட்டுமே..
💞வயதால் எவ்வளவு தான்
வளர்ந்தாலும் அக்காவுக்கு
தன் தம்பி என்றுமே
சிறு குழந்தை தான்..
💞சின்ன சின்ன கோபங்கள்.
சின்ன சின்ன சண்டைகள்.
நட்பு.. பாசம்.. நேசம்..
எல்லாம் வேண்டும்
அக்கா தம்பியின்
உண்மையான அன்புக்கு..
💞உன் அன்பிற்கு நான் அடிமை.
உன் அரவணைப்பில்
நான் குழந்தை..
உன் அச்சத்தில் நான்
உன் தம்பி..
💞தாயிடம் கூட சில உண்மைகள்
மறைப்பதற்கு இருக்கலாம்..
ஆனால் அக்காவிடம்
மறைப்பதற்கு பொய்கள் கூட
ஒன்றுமில்லை..
💞தாயின் மறு உருவமாக நீ..
உனது முதல் குழந்தையாக நான்
அன்பால் இணைந்து இருக்கும்
இரு மலர்கள்
அக்கா – தம்பி..
💞அக்கா எனும் வார்த்தையில்
தாய்மையை முதன் முதலாய்
தந்து என் கண்ணீரிலே
மொத்த உயிரையும்
வைத்தவன் அவன்
என் தம்பி..
💞அக்கா – தம்பி
உறவைப் பற்றி கவிதை
எழுத முயன்று தோற்றேன்.
இந்த அக்கா – தம்பி உறவே
அழகிய கவிதை
என்பதை உணர்ந்து..
💞மறு ஜென்மம் வந்தால் கூட
நான் தான் இவளின் தம்பி.
என்றும் என்றென்றும்
இவளின் சொந்தம் வேண்டும்..
அக்கா தம்பி கவிதை வரிகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்