அம்பாறை – அக்கரைபற்று, அரசடி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டுபேர் உயிர் இழந்துள்ளனர்.
அரசடியில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த ஆலையடிவேம்பை சேர்ந்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததுடன் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிர் இழந்துள்ளார்.
சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.