ஹிருணி விஜே­ரத்ன

ஹிருணி விஜே­ரத்ன

📌டெக்­ஸாஸின் ஹொட்­சனில் நடை­பெற்ற சர்­வ­தேச மரதன் போட்­டியின் போதே ஹிருணி புதிய சாதனையைப் படைத்தார். இதற்கு முன் இலங்கை வீராங்­கனை நிலூகா ராஜ­சே­க­ர­வினால் நிலை­நாட்­டப்­பட்­டி­ருந்த இரண்டு மணித்­தி­யா­லயம் 40 நிமிடம் 7 வினா­டி­களில் அடைந்த பந்­தயத் தூரத்தைஇ தற்­போது ஹிருணி விஜே­ரத்ன இரண்டு மணித்­தி­யா­லயம் 36 நிமி­ட ங்கள் 35 வினா­டிகளில் கடந்து இலங்­கையின் தேசிய சாத­னையை புதுப்­பித்­துள்ளார்.

📌இந்த தேசிய சாத­னை­யுடன் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் கோல்ட் கோஸ்டில் நடை­பெ­ற­வுள்ள கொமன்வெல்த் போட்­டி­களில் பங்­கு­பற்­றவும் தகு­தி­பெற்றார். கடந்த ஆண்டு அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற 2017 Eugene  மரதன் ஓட்டப் போட்­டியில் பெண்கள் பிரிவில் ஹிருணி வெற்­றி­பெற்­றி­ருந்தார்.

📌ஹிருணி விஜே­ரத்ன 2017 Eugene மரதன் போட்­டி­யினை நிறைவு செய்­வ­தற்கு 2:43:31 மணி நேரத்தை எடுத்­துக்­கொண்டார். இந்தப் போட்­டியில் ஹிருணி வெளிப்­ப­டுத்­திய நேரத்­திற்­க­மைய அவர் கடந்த ஆண்டு லண்­டனில் நடை­பெற்ற உலக சம்­பி­யன்ஷிப் தட­கள் போட்­டியில் பங்­கு­பற்­றவும் தகுதி பெற்றார்.

📌ஹிருணி அமெ­ரிக்­காவில் வாழ்­வ­தோடு அங்­கி­ருந்து போட்­டிக்­கான பயிற்சி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றார். அதேபோல் மரதன் போட்­டி­களில் சர்­வ­தேச அளவில் மிகப்பெரிய பந்தயமாக கருதப்படும் லண்டன் மரதன் போட்டியிலும் ஹிருணி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்