ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைச் சம்பவம் : 3 இந்திய பிரஜைகள் கைது

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீக்கிய இனத்தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விடயத்தில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த கொலைச் சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு உள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார்.

எனினும் இந்தியா இந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்திருந்தது.

இவ்வாறான பின்னணியில் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இருவரும் 28 வயதுடைய ஒருவரும் என மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

அவர்கள் மீது கொலை, கொலைக்கான சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த மூவரும் கடந்த ஐந்து வருடங்களாக கனடாவில் தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆராயப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்