வேப்பிலை பயன்கள்

வேப்பிலை பயன்கள்

வேப்பிலை பயன்கள்

🟢🟤வேப்பிலை என்றாலே சிலருக்கு முகம் கோணல் மானலாக மாறும். ஏனென்றால்இ அதன் கசப்பு சுவையை யாரும் அறியாதவர்கள் இல்லை. பொதுவாகவேஇ கிராமப்புறங்களில் உள்ள எல்லா வீடுகளிலுமே வேப்பமரம் இருக்கும். அதன் மகத்துவத்தை அறிந்துதான் நம் முன்னோர்கள் வேப்ப மரத்தை தங்களின் அருகிலேயே வைத்திருக்கிறார்கள்.  வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, காய், குச்சி என மரம் முழுவதுமே பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை அந்தவகையில் வேப்பிலையின் பயன்களைப் பார்ப்போம்.

🌳வேப்பம் பூவை உலர்த்தி, பொடி செய்து, ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரில் போட்டு குடித்தால், வயிற்றுப்புண் குணமாகும்.

🌳அதிகாலையில் வெறும் வயிற்றில், வேப்பங் கொழுந்தை சாப்பிட்டால்இ வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும்.

🌳வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து, பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் அல்லது நெய்யில் வறுத்து உப்பு கலந்த சாதத்துடன் சாப்பிட்டால், ஏப்பமும், வாந்தியும் நின்று விடும்.

🌳வேப்பங் கொழுந்தை அரைத்து, முகத்தில் உள்ள பருக்களில் பூசி வந்தால், பருக்கள் நீங்கி விடும்.

🌳காய்ந்த வேப்ப இலைகளை துாளாக்கி, சாம்பிராணி சேர்த்து புகை போட்டால், வீட்டில் கொசுத் தொல்லை இருக்காது.

🌳சில பெண்களுக்கு முகத்தில் அரும்பு மீசை இருக்கும். வேப்பங் கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் ஆகியவற்றை காய வைத்து, மாவு போல அரைத்து, தினசரி பூசி வந்தால், ரோமங்கள் நீங்கி, மீண்டும் முளைக்காமல் இருக்கும்.

🌳தினமும் காலையில் வேப்பிலை சாற்றை குடித்து வருவது உங்க செரிமான பிரச்சினைகளை போக்க உதவுகிறது. இதிலுள்ள அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் வாயு உருவாக்கத்தை தடுக்கின்றன. இதன் மூலம் வயிற்று வீக்கம், வாயு மற்றும் வயிற்று மந்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.வேப்பிலை சாறு நிறைய தொற்றுகளுக்கு காரணமான பாக்டீரியா, வைரஸ், வைரல் மற்றும் பூஞ்சை இவற்றை எதிர்த்து போராட உதவுகிறது. காய்ச்சல், சலதோஷம் மற்றும் தொண்டை புண் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.🌳வேப்பிலை சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், அல்சர், பெப்டிக் புண்கள், வாய்ப் புண்கள் போன்றவற்றை குறைக்கிறது. இதிலுள்ள பயோஆக்டிவ் சேர்மங்கள் திசு உருவாக்கத்தையும், சேதமடைந்த திசுக்களை மீட்கவும் உதவுகிறது. சீக்கிரமே காயங்களை ஆற்ற உதவுகிறது.

🌳வேப்பிலை சாற்றின் கசப்பான தன்மை காரணமாக இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. இது மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைத்து இரத்த சர்க்கரை ஏறாமல் உடனே ஏறாமல் தடுக்கிறது.

🌳வேப்பிலை விதை சாற்றில் அசாதிராச்ச்டின் என்ற பொருள் உள்ளது. இது தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல், பேன் தொல்லை இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

வேப்பிலை பயன்கள்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்