“வெற்றிக்கான மென் திறன்கள்” எனும் தொழின்முறை சுய ஊக்குவிப்புப் பயிற்சி

கிழக்குப்பல்கலைக்கழக பழையமாணவர்கள் சங்கம்(Eastern University, Sri Lanka Alumni Association – EUSLAA) ஒழுங்கமைத்து நிதி அனுசரணை வழங்கிய “வெற்றிக்கான மென் திறன்கள்” (Soft Skills for Success – S3) எனும் தொழின்முறை சுய ஊக்குவிப்புப் பயிற்சி நேற்று புதன்கிழமை சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களுக்கு நடைபெற்றது.

துரைராஜா பிரஷாந்தன் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சியை நடத்தினார்.

சிறப்பான தொடக்க நிறைவு உரைகளை ஆற்றி சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியவர் SVIAS தொழில் வழிகாட்டல் ஒருங்கிணைப்பாளர் திரு.T.வாகீசன்.

கிழக்குப்பல்கலைக்கழக பழையமாணவர்கள் சங்க (EUSLAA) தலைவர் திரு.சீ.ஜெயக்குமார் பயிற்சி நோக்க உரையை சிறப்பாக வழங்கினார் அத்தோடு EUSLAA பொருளாளர் திரு.G.D நிர்மல்ராஜ் வருகையளித்திருந்தார்.

சகல அணிகளிலிருந்தும் 50 மாணவர்களை அனுமதித்த போதும் அண்ணளவாக 150 மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் இராசதுரை அரங்கில் நிறைந்திருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்